Tuesday, May 12, 2009


இது கலிகாலம். நம்ம பெருசுங்களோட வேலையைப் பாருங்கப்பா.

என்ன கொடுமை சரவணன்! 



Friday, May 8, 2009

இரண்டு எழுத்து இன்பம்

இரண்டு எழுத்து நினைத்தாலே இன்பம்
பல வகை, பல முறை முயன்றும்
இன்னும் உம் சுவையாரியோம் - நீ
கசப்பா புளிப்பா இல்லை - இனிப்பா
நீயே உண்மை உரைப்பாயாக - பீர்

நீ யார்?

நான் கண்ணை மூடினாளும்
கனவாக என்னுள் - கலகம்
செய்யும் பெண்ணே - நீ யார்?

Wednesday, May 6, 2009

நீங்கள் இப்படி தானா..!

தேவை உங்களுக்கு நீங்கள்
ஏறிக் கொள்ள ஒரு ஏணியாய்
ஒரு நண்பன்.

தருதலைகளையும் தங்கமாக
மாற்றுவான் அந்த நண்பன்

ஒரு வேலையும் செய்ய விட மாட்டீர்கள்
உங்களுக்கு ஒரு வேலை ஆக
வேண்டியிருந்தால்

நூறு முறை சொல்வாய் - நண்பா நண்பா என்று
நம்புவான் அவனும் - அது
பசுவின் தோல் போற்றிய பன்னி - என்று
தெரியாமலே..!

இனிமையானவர்கள் - எப்போதும்
மரம் போல் பதிலெதும் சொல்லாது
ஈ ஈ என்று இழித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் நினைத்தது நடந்து விட்டால்
நன்றி கூட சொல்ல தெரியாது - கேட்டால்
நண்பர்களுக்குள் எது நன்றி என்பாய்
நீதான் நண்பர்களின் - இலக்கணம்
தெரிந்தவள் போல்.

விளக்குவாய் உன் தலை கனத்தை
புரியவைப்பாய் நான் பசு வல்ல - பன்றி தான் என்று.!

இறைவா..!
இருக்கலாம் அவர்களுக்கு பல நண்பர்கள் - ஆனால்
இவர்களின் நட்பே கிடைக்காமல் இருக்க
எனக்கு அருள் புரிவாயாக..!