Thursday, March 26, 2009

பிரிவது சுலபமா

பிரிவது சுலபமா? இருக்கலாம்
மனசாட்சியற்ற மூடர்களுக்கு..!
நானும் ஒரு மூடன் தான் அவ்வழியில்

பாசத்தை பணயமாக்கி
மனத்தை பிணமாக்கி
வாழும் ஒரு அயல்நாட்டு மூடன்

பணமே வாழ்க்கையா? வாழ்க்கையே பணமா?
தெரியவில்லை விடயம் - இன்னும் எனக்கு?

கற்றதோ கணிப்பொறி பொறியியல் - மரியதையாம்
அயல்நாட்டில் வேலை பார்த்தால் மட்டுமே
சும்மா இருந்த சங்கை ஊதி - கெடுத்தர்கள்
உறவினர்கள் எனும் மாமேதைகள்
என்னை இல்லை - எனது
பெற்றோர்களின் மனத்தை

வாழ்க்கையில் நமது பெரிய கடன் - பெற்றோர்களின்
ஆசையை முடிந்த அளவு நிறைவு செய்வது
நானும் முயன்றேன்
அடைந்தேன் லட்சியத்தை
செல்ல வேண்டிய நாள் வந்தது - அயல் நாட்டு பணிக்கு

எல்லாமே புதுசு
பேசும் பாசை உண்ணும் உணவு,
உடுக்கும் உடை - ஆண்களுக்கு அல்ல

கண்டேன் பல நமீதாக்களை நடு தெருவில்
கண்டேன் கலாசாரத்தை - கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் பயம்

முடியாது கொண்டாட உன் பொங்க லை
முடியாது கொண்டாட உன் தீபாவளி யை
முடியாது நினைத்தவுடன் தொடர்பு கொள்ள
முடியாது அழகிய தமிழில் பேச
இருக்காது பிடித்த உணவு
இருக்காது சண்டை போட - உன் நண்பர்கள்
இருக்காது பார்க்க பிடித்த திரைப்படம்

சொல்லவில்லை அந்த மாமேதைகள்
ஒரு வேளை சொல்லி இருந்தால்
என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில் - ஏன்
கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்
என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பேன்

6 comments:

Unknown said...
This comment has been removed by the author.
LakshmiLakshmanan said...

S Mr.Thiruvalluvar really gud

Cheers!

Unknown said...

Thanks Angel..

Unknown said...

Thiruvalluvar avargale...
"பிரிவது சுலபமா" Super..!!!!
Very true infact...

புலவர். புலிகேசி said...

Asha Akka, Thanks for your comments and reading this blog

Unknown said...

Super Maaps! Ippidi oru kavignan unglakkulla volunthirukkaan nenaikkave bayama irukku!!!