Thursday, March 26, 2009

காதல்

"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா
துவண்டு போய் உக்காராதீங்க....
தெய்வத்தை மாத்திட்டு
காதலைக் CONTINUE
பண்ணுங்கப்பூ....
"

எங்கள் ஆசான் - பாடல்கள்



வரிகள் அருமை, ஆனால் என்ன விஜயகாந்த் க்கு எழுதுரோம்னு மறந்துட்டு எழுதி இருக்கார் போல, போய் சொல்லுறது தான் புலவர்காளோட பொழப்பு, இங்கே வரிகளில் நிருபித்தி இருக்கார்..

டான்ஸ் ஆட சொன்னால், சும்மா பந்தா பண்ணிட்டு போற பயலுக்கு இந்த வரிகள் கொஞ்சம் ஓவர் தான் பா.!

கண்டிப்பா, இசை அமைப்பாளரை பத்தி சொல்லியே ஆகணும், பெரிய திருட்டு பயலா இருப்பான் போல. ஒரு மெட்டு கூட சொந்தமா போட்டது மாதிரி தெரியல.

பாட்டை கேட்டு என் கண் கலங்கிருச்சு, கற்பனை பண்ணி பாத்தாலே நெஞ்சு வலி வருதே..! படத்துல பாத்தால்.. கொடுமை சார்..!

எழுதியதில் - பிடித்தது

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் நாட்டுக்கட்டைக்கு உண்டு

பொருள்:

பார்த்த உடனே மகிழ்ச்சியளிப்பதும் உள்ளத்தில் கிளர்ச்சியளிப்பதும் நாம் அடிக்கும் சரக்குக்குக்கூட கிடையாது. ஆனால் பார்க்கும் நாட்டுக்கட்டைக்கு உண்டு


(திருக்குறள், அதிகாரம் -129)


பிரிவது சுலபமா

பிரிவது சுலபமா? இருக்கலாம்
மனசாட்சியற்ற மூடர்களுக்கு..!
நானும் ஒரு மூடன் தான் அவ்வழியில்

பாசத்தை பணயமாக்கி
மனத்தை பிணமாக்கி
வாழும் ஒரு அயல்நாட்டு மூடன்

பணமே வாழ்க்கையா? வாழ்க்கையே பணமா?
தெரியவில்லை விடயம் - இன்னும் எனக்கு?

கற்றதோ கணிப்பொறி பொறியியல் - மரியதையாம்
அயல்நாட்டில் வேலை பார்த்தால் மட்டுமே
சும்மா இருந்த சங்கை ஊதி - கெடுத்தர்கள்
உறவினர்கள் எனும் மாமேதைகள்
என்னை இல்லை - எனது
பெற்றோர்களின் மனத்தை

வாழ்க்கையில் நமது பெரிய கடன் - பெற்றோர்களின்
ஆசையை முடிந்த அளவு நிறைவு செய்வது
நானும் முயன்றேன்
அடைந்தேன் லட்சியத்தை
செல்ல வேண்டிய நாள் வந்தது - அயல் நாட்டு பணிக்கு

எல்லாமே புதுசு
பேசும் பாசை உண்ணும் உணவு,
உடுக்கும் உடை - ஆண்களுக்கு அல்ல

கண்டேன் பல நமீதாக்களை நடு தெருவில்
கண்டேன் கலாசாரத்தை - கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் பயம்

முடியாது கொண்டாட உன் பொங்க லை
முடியாது கொண்டாட உன் தீபாவளி யை
முடியாது நினைத்தவுடன் தொடர்பு கொள்ள
முடியாது அழகிய தமிழில் பேச
இருக்காது பிடித்த உணவு
இருக்காது சண்டை போட - உன் நண்பர்கள்
இருக்காது பார்க்க பிடித்த திரைப்படம்

சொல்லவில்லை அந்த மாமேதைகள்
ஒரு வேளை சொல்லி இருந்தால்
என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில் - ஏன்
கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்
என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பேன்

எழுதி நாளாகி விட்டது

எங்கிருந்தான் வள்ளுவன் எனும் இந்த கிறுக்கன்
இவ்வொரு காலம் - இருந்தான்
சில காலம் அவன் தாய் மடியில் - ஆம்
அவன் நாட்டில் நண்பர்களுடன்
இருந்தான் சிலகாலம் - சந்தோசமாக..!

வந்து விட்டான் இறைவன் அருளால் பத்திரமாக
எழுதுவான் அவன் அருளால் - சிவமயம்

எழுதுகிறேன் பைந் தமிழில் - என் முதல்
அயல்நாட்டு பயணத்தை பற்றி..!

Friday, January 2, 2009

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

அக்கம் பக்கம் கேட்டது - கொஞ்சம் சிரிக்கலாமே :)

பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.அய்யோ அப்புறம்?அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.


***********************************


சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போகிறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு !
*************************************
தொழிலாளி : எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளம் சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது !!!!!!
**************************************
;;;;;;;;;;;;;;;;;ரத்தத்தின் ரத்தமேன்னு கூப்பிட்டது தப்பாப்போச்சுய்யா..
ஏன் தலைவரே ?
இப்ப நம்ம கட்சி பல குரூப்பா பிரிஞ்சுடுச்சு..!
**************************************
சிறைச்சாலையை சுத்திப் பாத்துட்டு தலைவர் வருத்தப்பட்டாரா ஏன் ?
அந்தக்காலத்துலே இவ்வளவு வசதி இருந்திருந்தா சுவரேறி குதிச்சு அவர் தப்பியிருக்க மாட்டாராம் ..!

***************************************