Wednesday, May 6, 2009
நீங்கள் இப்படி தானா..!
ஏறிக் கொள்ள ஒரு ஏணியாய்
ஒரு நண்பன்.
தருதலைகளையும் தங்கமாக
மாற்றுவான் அந்த நண்பன்
ஒரு வேலையும் செய்ய விட மாட்டீர்கள்
உங்களுக்கு ஒரு வேலை ஆக
வேண்டியிருந்தால்
நூறு முறை சொல்வாய் - நண்பா நண்பா என்று
நம்புவான் அவனும் - அது
பசுவின் தோல் போற்றிய பன்னி - என்று
தெரியாமலே..!
இனிமையானவர்கள் - எப்போதும்
மரம் போல் பதிலெதும் சொல்லாது
ஈ ஈ என்று இழித்துக் கொண்டிருந்தால்
நீங்கள் நினைத்தது நடந்து விட்டால்
நன்றி கூட சொல்ல தெரியாது - கேட்டால்
நண்பர்களுக்குள் எது நன்றி என்பாய்
நீதான் நண்பர்களின் - இலக்கணம்
தெரிந்தவள் போல்.
விளக்குவாய் உன் தலை கனத்தை
புரியவைப்பாய் நான் பசு வல்ல - பன்றி தான் என்று.!
இறைவா..!
இருக்கலாம் அவர்களுக்கு பல நண்பர்கள் - ஆனால்
இவர்களின் நட்பே கிடைக்காமல் இருக்க
எனக்கு அருள் புரிவாயாக..!
Wednesday, April 15, 2009
தேர்தல் : இவுங்க சொல்ல விரும்புகிற வடிவேலு பட டயலாக்குகள்
வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."
ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"
தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"
சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"
அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."
சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"
கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"
Wednesday, April 8, 2009
குடிமக்களின் மனப்பூர்வமான நன்றி நன்றி!!
செய்தி: நேற்று அயர்லந்து அரசு, புதிய வரியை அறிவிப்பு செய்தது. அதில் மது பனங்களுக்கு வரி விலக்கு.!
Monday, March 30, 2009

விஜய டி.ராஜேந்தருக்கு ஆஸ்கார் விருது 2009- சிறந்த காமடியன் (அரசியல்)
இவருடன் போட்டி போட்டவர்கள்- சுப்ரமணியன் சுவாமி, விஜயகாந்த்
செய்தி:
-----------
தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் வரும் மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
லட்சிய திமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஆண்டிப்பண்டாரம்:
------------------------------
இவரை மாதிரி ஒருத்தர் இல்லேன்னா அரசியல் அவ்வளவு சுவாரஸியமாக இருக்காது போலிருக்கே! தனி ஈழத்தை ஆதரிக்கிற கட்சின்னா இவர் நெடுமாறன் கட்சியோடதான் கூட்டு வைக்கணும்.
Friday, March 27, 2009
நானும் அரசியல்வாதி
நான் தான் நல்லவன் என்று
பிகர்கலிடம் பிலிம் போடும் போது
எத்தனையோ வாக்கு உறுதிகள்
கொடுத்திருக்கேன்
காப்பாற்றியும் இருக்கேன் - எப்போ?
பிகரை செட் பண்ணும் போது
நானும் சென்று இருக்கேன் ஊர் ஊராக
பிரசர்ரம் பண்னவா - இல்லை
படம் பாக்க, அவளுடன் தான்
அலைந்தேன் கூட்டணி அமைக்க
என் வீட்டுக்கும் - அவள் வீட்டுக்கும்
அமையவில்லை கூட்டணி
தளர வில்லை, நின்றேன் தனியாக
வென்றேன் சுயேட்ச் சையாய்
கிடைத்தது கணவன் எனும் அமைச்சர் பதவி
வீடெனும் சட்ட சபையில் - சப்தமாக
விவாதிதித்து இருக்கேன்
குரலும் கொடுத்து இருக்கேன்
முல்லை பெரியார் ஆணையின் - நீர்
மட்டத்தைஉயர்த்து வது பற்றியா - இல்லை
சாம்பாரில் நீர் மட்டத்தை குறைப்பது பற்றி
ஒன்றும் சாதகமாக அமயவில்லை
ஒரு தனி மனிதனுக்கு (எனக்கே) நல்லது கூட
செய்ய முடிய வில்லை எனில் - தேவையா
இந்த அமைச்சர் பதவி, செய்து விட்டேன் ராஜினாமா
மாறிவிட்டேன், மாற்றிவிட்டேன்
கொடியையும், தூண்டையும்
இப்போ நான் ஒரு சாதாரண அரசியல்வாதி
அமைச்சர் பதவி காலியா இருந்தால் - தொடர்புக்கு
உயர்திரு உத்தமன்
அரை என்420, M.L.A விடுதி
சட்ட சபை பின்புறம்
சென்னை