Thursday, October 30, 2008

மொக்கப்பாண்டியின் தத்துவங்கள்-1


பீடியிலே பத்த வச்சா புகை
பாடியிலே பத்த வச்சா சிதை

போஸ்ட்மேன்கிட்ட போஸ்ட் வாங்கலாம்
வாட்ச்மேன்கிட்ட வாட்ச் வாங்கமுடியுமா

தண்ணியிலே போனா கப்பல்
கப்பல்லே தண்ணி போனா உப்பல்

கலாம் ஒரு கனவு


உன்னை மகரஜோதி என்று மகிழ்ந்து நின்றோம்

நீயோ மின்மினிப் பூச்சியாக சென்றுவிட்டாய்

நவீன இந்தியாவை கட்டும் சிற்பி என வர்ணித்தோம்

உளியில்லாமல் பின்வாங்கி விட்டாய் நீ

வல்லரசாக்கப்போகிறேன் என்று, இருந்த ராஜ்ஜியத்தை தொலைத்ததேனோ!

எட்டாக்கனிக்கு ஆசைப்பட்ட குரங்குகளாய்

யானையைக் கற்பனை செய்த குருடராய்

தன் கால் உத்தரம் என்று நினைத்த கொக்குகளாய்

மதுவருந்தி மயங்கிப்போன வண்டுக்ளாய்

திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் நாங்கள்

விட்டுச்சென்ற தாயாய் நீ

கனவு காணச்சொன்ன கலாமே கனவாகிப் போனதென்ன!

Wednesday, October 29, 2008

கலாச்சாரத்திற்கு கல்லறை கட்டும் வெட்டியான்கள்


அன்பர்களே, ஒரு கொடுமையான் சீரழிவிற்கு விதைபோட முய்ற்சிக்கும் வீணர்களைப் பாருங்கள்.

"Dynamic Marriage" என்று ஒரு கோட்டான்கூட்டம் தமிழ்மண்ணில் கிள்ம்பியிருக்கிற்து. பாடலாசிரியன் ‘சிநேகன்’ இதை ஆரம்பித்திருக்கிறான். அந்த அவலத்தை கீழுள்ள "youtube" லிங்கில் காணுங்கள். 

http://www.youtube.com/watch?v=umojiUlVAso

இந்த நாசகார ஒநாய்களை ஒடஒட விரட்டிக் கொல்ல வேண்டும். இன்னொரு பகத்சிங் வேண்டும்.

என் காதலி

கல்லூரி நாட்களில் என்
கற்பை சூரையாடிய கள்ளி
கார் காலத்தை வஸந்தமக்கிய தென்றல்

அவள் ஒரு கருப்பு வெள்ளை அழகி - ஆனால்
கிராமத்து குயில் அல்ல

அவள் ஒரு புரியாத புதிர் - புதியவர்களுக்கு
அவள் ஒரு அமுத சுரபி - அறிந்தவர்களுக்கு

பல வண்ண மயில்கள் இருந்தும் - ஏனடா
இந்த கரு மயிலின் மீது காதல் என்ற
தோழர்களின் விணாக்களுக்கு விடை
சொல்லாது இருந்தவன் - அவளை பற்றி..!

கொடிய வைரஸ்கலிடம் இருந்து எமை
காத்த ராட்சகி - அவள்

சின்ன அறையில் என்னை செய்ய கூடாத
செயல் களையும் செய்ய வைத்தவள் - அமைதியாக
பிடித்திருந்தது அது மிகவும் எனக்கு

மறுநாள் தான் தெரிந்தது - அவள்
அனைவர்க்கும் பல சேவை செய்யும் செவகி என்று

நொறுங்கியது என் மனம், வெடித்தது என் இதயம்
என் காதலி ஒரு செவகியா என்று

என்ன செய்ய காதலித்து விட்டேன்
வாழ்கிறேன் இன்னும் அவளின் காதலனாக
அவளை ஆட்கொள்ளும் வித்தையும்
கற்றுக்கொண்டு வாழ்கிறேன்

நான் ஒரு UNIX ADMINISTRATOR - என் காதலியும் UNIX


நண்பர்களே, இது ஒரு அனுபவ கவிதை, இவ் வரிகளின் விளக்கம் விரைவில், புதியவர்களுக்கு சரியான விளக்கம் புரியாது

தகவல்


ந்ண்பர்களே,  நீங்கள் தமிழில் phonetic-ஆக டைப் அடிக்க கீழ்க்க்ண்ட தளங்களைப் பயன்படுத்துங்கள்.

www.quillpad.com/tamil   - இத்தளத்தில் சென்று டைப் அடித்து நம் தளத்தில் copy செய்யலாம்.
http://software.nhm.in  - இத்தளத்தில் சென்று nhmwriter சாஃப்ட்வேரை ட்வுன்லோட் செய்து ஆன்ஸ்கிரீன் கீபோர்டைக்கொண்டு டைப் செய்யலாம்.

உங்களின் ஊக்கமும், ஆக்கமும் எங்களுக்குத் தேவை. தயைகூர்ந்து!

லஞ்சம் - உண்மை கவிதை


லஞ்சம் -
வாங்கி பழகாதவன் - ஆனால்
நான் கொடுத்தே பழகியவன்
ஏன், எதற்கு, எதை ?

பள்ளி தோழி என்னுடன்
பள்ளிக்கு வர நான் - தந்த
பல்லி மிட்டாய்

ஓ.சியில் மப்படிக்க - சொம்பு
பயலை சீயான் என்றது.

எனக்கும் GIRL FRIEND வேண்டும் என்று
சப்ப FIGURE யும் செம FIGURE என்றது..!

கழுதை போன்ற அவள் கானத்தையும் - ஆகா
இது தானே குயில் ஓசை என்றது ..!


நண்பர்களே, எனது கிறுக்கல் களையும் படித்து
இது அல்லவா கவிதை என்று சொல்லி
எனக்கே லஞ்சம் கொடுத்து விடாதே..! - ஏனெனில்
நான் கொடுத்தே பழகியவன் - அல்வா..!
-திருவள்ளுவர்

திருமணத்திற்கு முன் - பின்

திருமணத்திற்கு முன் காதலியின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின் காதலன் மாறவேண்டும்

திருமணத்திற்கு முன் காதலனின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின்னும் காதலி மாறக்கூடாது

ஆனால் :

திருமணத்திற்கு பின்னும் ஆண் மாறுவதில்லை

திருமணத்திற்கு பின் பெண் முற்றிலும் மாறுகிறாள்

காதல் மன வாழ்வின் அடிப்படை பிரச்சனை இதுவே :)