Sunday, October 26, 2008

அது ஒரு கனாக்காலம்

விடிய விடிய அம்மாவுடன் பலகாரங்களை சுட விழித்திருப்பேன்
அதிகாலையில் பாட்டியுடன் கறிக்கடை சென்று க்றி வாங்கி வருவேன்
காலை எண்ணெய் தேய்த்து குளித்து புதுச்சட்டை மாட்டி வேட்டு வெடிப்பேன்
மணிக்கொரு தரம் முறுக்கையும் அதிரசத்தையும் மேய்ந்தபடியே வலம் வ்ருவேன்
பலகார மக்கு போக்க சோறுடன் ரசம் மட்டும் சாப்பிட்டு புளியேப்பம் தவிர்ப்பேன்
எவ்வளவு மொக்க படமாக இருந்தாலும் தீபாவளியன்று தியேட்டரில் பார்த்தே தீருவேன்
ஆம் அது ஒரு ஏகாந்தம்!

இன்று அதை அசைபோட்டவாறு ஷவர்ஜெல் கலந்த பாத்டப்பில் மிதந்து கிடந்தேன்
என் உத்தரவு இல்லாமல் விழியோரம் கண்ணீர்த்திவலைகள்.
இதயத்தில் எங்கோ ஒரிடத்தில் இனம் புரியாத வலி
வ்ருமா அந்த வசந்த காலம்
திரும்புமா மீண்டும்
எனக்கு வேண்டும் ஒரு டைம் மெஷின். நான் என் பொற்காலத்திற்கு பய்ணிக்க வேண்டும்
என் பழைய தோழ்ர்களே காத்திருஙக்ள். நானே வருவேன்!

3 comments:

gmurugan27 said...

மறக்க முயன்ற என் நினைவுகளை தூண்டி விட்ட இயல்பான வார்த்தை வரிகள்..

Unknown said...

unmaithan panathai thedi odikonndu irrukum nam ,pala parampariya nijangalai tholaythuvitu nitirayil valnthu kondu irrukindrom....

valukatayamai ennai kuliyal,vidalaithanamai patasu vedithal,nambargalodu cinema ...tholaikakudatha silla pokisha ninayvugal....

Nithya said...

Avasaramana valkayil ,pandikai koodha avasarathil than nadhantheriyathu!!!
Ungal unmayana vaarthaikallil
senru vanthaen -ennathu palaya ,inniya theepavali thinankaluku!