Monday, October 20, 2008

எங்கள் ஆசான் - ஒரு காதல் காவியம்

எங்கள் ஆசான் - ஒரு காதல் காவியம்

டென்னிஸ் வீரர்களாக - விஜயகாந்த், விஜய T.R
டென்னிஸ் COACH - சானியா மிர்சா.
கதை - திருவள்ளுவர்.
இயக்கம் - கம்பர்.
தயாரிப்பு - யாரும் இந்த படத்தை எடுக்க, READY யா இல்லை.

கதை சுருக்கம்:
விஜயகாந்த், T.R ரெண்டு பெரும், நல்ல நண்பர்கள், மச்சான் முறை. கல்லூரியில் மேல் நிலை பட்டம் U.K.G பயிலும் மாணவர்கள். ரெண்டு பேருக்கும், விளையாட்டு ரொம்ப ஆர்வம். 3 சீட்டு, கடா பிடா டொக்கு, குண்டு, போன்ற வீர விளையாட்டுகளில் expert. அப்போ கல்லூரி நூலகத்தில் ரெண்டு பெரும், சரோசா தேவி BOOK, நடு பக்கத்தில் சானியா மிர்சா புகைப்படம். இரவில் ரெண்டு பேருக்கும் ஒரு கனவு.

மறுநாள் கல்லூரியில், உடர்கல்வி வாத்தியார் சாணிய மிர்சாவிண் மறு பக்கத்தை பத்தி சொல்லுரர். அப்படியே நம்ம விஜய் & விஜய்க்குள்ளே, ஒரு யோசனை, எப்படியாவது நம்மாளும் டென்னிஸ் பெரிய ஆல வந்து, சனியா வா கல்யாணம் பண்ணும் னு.

க்லாஸ் வச்ச எல்லா டெஸ்டிலேயும் FAIL, எப்படியோ, விளையாட்டு மந்திரிக்கு மாமா வேலை பாத்து, சானியா கிட்ட TRAINING சேர்த்துவிடுகிறார்கள்.

3 மாசம், பயிற்சி. சானியா எப்படியே, ரெண்டு பேருக்கும், டென்னிஸ் சொல்லி கொடுத்து, NATIONAL TEAM SELECTION க்கு, ரெண்டு பேரையும் அனுப்புராங்க..

இங்க விஜயகாந்த் மட்டும் SELECT ஆகிடுரர். T.R வீட்டுக்கு அனுப்பிவிடுராங்க. விஜய்காந்த் TRAINING னு சொல்லி சாணியாவாவை CORRECT பண்ணுரார். T.R நாளா தூங்க கூட முடியல.. ஒரே சிந்தனை, எப்படி விஜய்காந்த் தூக்கலாம்னு..

அப்போ ஆலோசனை கேட்டு, பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம் காண்கிட்ட போறார். காண் சொல்லுரர், எருமை எல்லாம் என்னால தூக்க முடியாது. வேணும் நா சாணியாவ தூக்கிருவோம்னு. T.R க்கு இந்த டீல் ரொம்ப புடிச்சிருக்கு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..!. ஒரே குஸி..!

வாசிம் காண், சானியா போற விமானத்தை கடத்திரூரார். அப்போ சானியா மிர்சா, விஜயகாந்துக்கு ஒரு SMS அனுப்புது. நம்ம ஆளு. BSNL office க்கு போயி, எந்த திசை இருந்து SMS வந்ததுணு கேட்டு, அடுத்த கட்ட ACTION க்கு READY ஆகிறார்.

அப்போ ISRO, ஓறு ராக்கெட் விடுது. நம்ம ஆளு, ராக்கெட் முன்னாடி ஒரே ஒரு JUMP பண்ணி ராக்கெட்டின் நுனியில் நின்றுவிடுகிறார். அப்படியே சானியா மிர்சா விண் கடததப்பிட்ட விமானம் அந்த வழியா வருது, அங்க இருந்து ஒரு JUMP பண்ணி, விமானத்தின் வாலை பிடித்து விடுகிறார். அப்படியே, ஒரு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று, சண்டை போட்டூ சானியாவை மீட்கிறார்.

இந்த இடத்தில், ரெண்டு பேருக்கும் ஒரு காதல் உருவாகிறது. ஒரு டூயட் பாடல். அப்படியே டென்னிஸ் பயிர்ச்சி..

கடைசியாக, டென்னிஸ் இறுதி போட்டி, விஜயகாந்த் & பாகிஸ்தான் வீரர் இருவருக்கும். இங்க ஒரு CONDITION. MAXIMUM 3 டென்னிஸ் மட்டை தான் பயன்படுததணும்னு. இந்த நேரத்தில், T.R 3 உடைந்த டென்னிஸ் மட்டைய CHANGE பண்ணிவிடுகிறார்.

MATCH ஆரம்பம் ஆகிறது. 3 பந்துகளில், 3 மட்டையும் உடைத்துவிடுகிறது. சானியா கண்களில் ஒரே கண்ணீர். விஜயககந்தூக்கு என்ன செய்யதென்று தெரிய வில்லை. கடைசியாக தனது கையை பயன்படுத்தி விளையாடி, வெற்றி பெறுகிறார்.

ஆனில, டென்னிஸ் என்பது, டென்னிஸ் மட்டையால் விளையாட வேண்டிய விளையாதடு. கையால் விளையாடியது செல்லாது என்று கூறி. கோப்பையை நிறுத்தி வைக்கிறது..

விஜயகாந்த் நீதிமன்றம் சென்று, தனது சொந்த திறமையினால், நீதிபதியை கடுப்பு ஏத்தி கிறார். கடுப்பகிபோன நீதிபதி. தாங்க முடியாமல், விஜயக்ஸாந்தூக்கு தீருப்பு சொல்லி இறந்து விடுகிறார்.

வெற்றியுடன், சாணியவை கை பிடிக்கிறார் விஜயகாந்த். அப்போ ஊர் மக்கள் அனைவரும் சொல்லு கிறார்கள் உன் மச்சனின் மனைவி உனக்கு சகோதரி. அதை பார்த்து T.R, என் காதலி இப்போ என் சகோதறியா என்று எண்ணி பைத்தியம் பிடித்து விடுகிறது.

நன்றி.

இது ஒரு காதல் காவியம்..!

2 comments:

Yokesh Babu said...

சுருக்கமா சொல்ல போனா இது ஒரு சப்ப படம்

Unknown said...

அருமையான விமர்சனம். விலா நோக சிரிக்க வைக்கும் விகாந்தின் சேட்டைகள், ட்ண்டணாக்க ராஜேந்தரின் அட்டூழியங்கள், வாவ்!