Monday, October 20, 2008

திரைப்பட விமர்சனம் - தனம்

திரைப்பட விமர்சனம் - தனம்

நல்ல கதை, ஒரு சேவ கியின் வாழ்வில் நடப்பதை மக்கள் ரசிக்கும் உருவில் தந்திருக்கார் இயக்குநர். இயல்பான சங்கீதா விண் நடிப்பு தான் இந்த படத்தின் பலம். எனக்கு என்னவோ சங்கீதா விண் வாழ்க்கையே படமாக எடுத்துள்ளாரோ என்று என்ன தோன்றுகிறது..

பாடல்கள் சுமார் என்றாலும், பாடல் காட்சிகள் பாட மாக்கிய விதம் அருமை.

நல்ல கருத்தை இயக்குநர் சொல்லி இருக்கார். அது என்ன வென்றால் "தருமம் தலை காக்கும்" என்பதே.. படத்தின் இறுதி கட்டத்தை ஆழ்ந்து பார்த்திருந்தால் உமக்கு இந்த உண்மை புலப்பட்டு இருக்கும்.

படத்தில் வந்துள்ள காவலர், நீதிபதி ஆகியோரும் ஒரு கருத்தை நினைவு படுத்தி இருக்கிறார்கள். அது தான் "செய் நன்றி மறவாதே". தனம் செய்த உதவி சிறிது என்றாலும். அதை மறவாது தேவை படும் பொழுது காலம் அறிந்து காவலரும், நீதிபதியும் உதவி இருந்திருக்கிறார்கள்.

படத்தில் காமெடி என்ற பெயரில், முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள். சுருங்க கூறின் தனம் ஒரு சிறந்த படம். வெட்டியாக இப் படத்திர்க்கு இசை அமைப்பாளர் தேவையா என்று என்ன தொனுகிறது.? மாலாயளத்தில் இருந்து ஒரு சிறந்த ஒளி பதிவாளரை பயன் படுத்தி இருக்கலாம்.

தனம் - மலிவு விலையில் கிடைக்கும் மாணிக்கம்.

No comments: