கல்லூரி நாட்களில் என்
கற்பை சூரையாடிய கள்ளி
கார் காலத்தை வஸந்தமக்கிய தென்றல்
அவள் ஒரு கருப்பு வெள்ளை அழகி - ஆனால்
கிராமத்து குயில் அல்ல
அவள் ஒரு புரியாத புதிர் - புதியவர்களுக்கு
அவள் ஒரு அமுத சுரபி - அறிந்தவர்களுக்கு
பல வண்ண மயில்கள் இருந்தும் - ஏனடா
இந்த கரு மயிலின் மீது காதல் என்ற
தோழர்களின் விணாக்களுக்கு விடை
சொல்லாது இருந்தவன் - அவளை பற்றி..!
கொடிய வைரஸ்கலிடம் இருந்து எமை
காத்த ராட்சகி - அவள்
சின்ன அறையில் என்னை செய்ய கூடாத
செயல் களையும் செய்ய வைத்தவள் - அமைதியாக
பிடித்திருந்தது அது மிகவும் எனக்கு
மறுநாள் தான் தெரிந்தது - அவள்
அனைவர்க்கும் பல சேவை செய்யும் செவகி என்று
நொறுங்கியது என் மனம், வெடித்தது என் இதயம்
என் காதலி ஒரு செவகியா என்று
என்ன செய்ய காதலித்து விட்டேன்
வாழ்கிறேன் இன்னும் அவளின் காதலனாக
அவளை ஆட்கொள்ளும் வித்தையும்
கற்றுக்கொண்டு வாழ்கிறேன்
நான் ஒரு UNIX ADMINISTRATOR - என் காதலியும் UNIX
நண்பர்களே, இது ஒரு அனுபவ கவிதை, இவ் வரிகளின் விளக்கம் விரைவில், புதியவர்களுக்கு சரியான விளக்கம் புரியாது
Wednesday, October 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kalakkals!
Really a sad luv story
Post a Comment